Vision & Mission of ELAG
The primary Vision and Mission of Everlasting Life Assembly of God Church is to Equip and to Enable the People of God to Achieve the Fullness of Life - the Everlasting Life with Christ Jesus (John. 3:16)
"தமிழ் நாட்டிலிருந்து கொல்லம் பட்டணத்திற்க்கு வந்து நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும், வேலை நிமித்தமாகவும், கல்வி பயிலவும், சுற்றுப்பயணத்திற்க்காகவும் மற்றும் தேவைகளுக்காகவும் வந்திருப்பவர்களுக்கு, உங்கள் தாய்மொழியாகிய தமிழில் ஆண்டவரை ஆராதனை கெய்ய வரவேற்க்கிறோம், வாருங்கள்."
Message
From the Pastor
Rev. G. Jerin Robert, B.A., B.D., M.Th*
வாழ்க்கை என்பது பல நிகழ்வுகள் கொண்டது. அவை நல்ல உணவு, உடை, ஆஸ்தி, அந்தஸ்சு, ஐஸ்வரியம் என்பது தான். எல்லா மனிதர்களும் மகிழ்ச்சி மற்றும் நன்மை நிறைந்த வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக சோதனைகளுக்குள்ளாக கடந்து போகிறார்கள். அவைகளால் பிரச்சனை, தோல்வி, வேதனை, நெருக்கம், சாபம், கஷ்டம், வியாதி, பிள்ளைகளின் கீழ்படியாமை மற்றும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை, சமாதானம் இல்லை, சந்தோஷம் இல்லை, சிலருக்கு உழைக்க பெலன் மற்றும் திறமை இல்லை. சிலர் கடுமையாக உழைத்தும் வருமையினால் நிம்மதியில்லாமல் வாழ்கிறார்கள். சிலர் நல்ல மேன்மையுள்ளவர்களாய் இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கிறார்கள். இப்படியாக வாழ்க்கையில் நிமிரக்கூடாதபடி பிரச்சனைகள் சூழ்ந்து நிற்கிறது. அருமையானவர்களே, மேலே சோல்லப்பட்ட அனுபவத்தின் வழியாக நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களா ? இது உங்களுடைய அனுபவமாயிறுக்கிறதா ? ஆம், என்றால் கவலைப் படவேண்டாம். இதோ உங்களுக்கு ஒரு நல்வார்த்தை ! சகல மனுஷனுக்கும் உள்ள நற்செய்தி ! எல்லா தீமைகளுக்கும், தொல்லைகளுக்கும் உங்களை விலக்கி இரட்சித்து, எல்லா பிரச்சனைகளையும் பரிகரித்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒருவரை அறிமுகப்படுத்துகிறதற்க்கு விரும்புகிறோம். அவர் பெயர் இயேசு. இயேசு உங்களை நேசிக்கிறார். அவர் உங்களை விடுதலை செய்வார். ஆசீர்வதிப்பார். இரட்டிப்பான நன்மைகளை தருவார். பெரிய மாற்றத்தை கொண்டு வருவார். வெற்றி மேல் வெற்றி தருவார். எல்லோரும் ஆச்சர்யப்பெடுமளவில் உங்களை அதிசயமாக்குவார். உங்கள் நோய்களை மாற்றி, வியாதிகளை நீக்கி, சாபங்களை முறித்து, பலவீனங்களை அகற்றி, பலவான்களாகவும் ஆறோக்கியம் உள்ளவர்களாகவும் மாற்றி புதிய முன்னேற்றத்தை தருவார். பணக்கஷ்ட்டத்தை மாற்றி கடன் பிரச்சனைகளை நீக்கி புதிய வழிகளை திறப்பார். ஒரு புதிய வாழ்க்கையை துருவார். சமாதானமும் சந்தோஷமும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை, நித்திய வாழ்க்கை. எல்லோறும் உங்களை விட்டு விலகிச் சென்றாலும் பயப்பட வேண்டாம், கலங்கவும் வேண்டாம். இயேசு உங்களோடிருப்பார், அவர் உங்களை கரம் பிடித்து வழி நடத்துவார். தாய் தன் பிள்ளையை மறந்தாலும் இயேசு மறக்கமாட்டார். பிரியமானவர்களே, அதிசயமானதும் ஆசீர்வதிக்கப்பட்டதுமாகிய ஒரு எதிர்காலம் உங்களை காத்துக்கொண்டிறுக்கிரது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறீர்களா ? இயேசுவிடம் வாருங்கள். இயேசு இந்த பூமியில் மனிதனாக அவதரித்து ந்ம்மேலுள்ள அவருடைய அளவற்ற அன்பை வெளிப்படுத்தினார். சகல மனிதர்களும் பாவத்தில் பிறந்து, பிசாசின் அடிமையாக பாவத்திலே வளர்ந்து, நித்டிய மரணத்திற்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களாக வாழ்ந்துக் கொண்டிருந்தப்பொழுது: மனம் திரும்புதலை குறித்தும், பரலோக இராஜ்ஜியத்தை குறித்தும், நித்திய ஜீவனை (வாழ்வை) குறித்தும் அவர் இந்த உலகத்திற்கு பிரசங்கம் பண்ணினார். மனிதனுடைய பாவத்தை மீட்க, பாவக்கறைகளை கழுவி பரிசுத்தமாக்க இயேசு கல்வாரி சிலுவையில் தம் இரத்தத்தை சிந்தி தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். "… அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்தீகரிக்கும்." (1 யோவான். 1:17)."… உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்." (ஏசாயா. 1:18). அவருடைய இரத்தம் உங்களை வெண்மையாக்கும். கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி, உயிரை விட்டு, பலியான இயேசு மனிதர்களின் பாவத்திற்க்கு பரிகாரம் செய்திருக்கிறார். மரித்து அடக்கம் பண்ணப்பட்ட இயேசு, மூன்றாம் நாள் மரணத்தை ஜயித்து உயிர்த்தெழுந்தார். இந்த உலகில் மரணத்தை ஜயித்து உயிர்த்தெழுந்த ஒரே ஒருவர் இயேசு மாத்திரமே. இதோ நான் சீக்கிரமாக மறுபடியும் வருகிறேன் என்று உறுதியாக சொல்லி அவர் பரலோகத்திற்க்கு சென்றார். பிரியமானவர்களே, இயேசு சீக்கிரமாய் வருகிறார். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஞானஸ்னானம் பெற்று, கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களாக வாழுகிறவர்களை சேர்க்க இயேசு வருகிறார். எல்லா மனிதர்களுக்கும் நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது. நித்திய அழிவிலிருந்து தப்புவித்து நித்திய வாழ்வுக் குட்பிரவேசிக்க குடும்பமாக இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு வருகிறார், ஆயத்தமாயிருங்கள்.
The primary Vision and Mission of Everlasting Life Assembly of God Church is to Equip and to Enable the People of God to Achieve the Fullness of Life - the Everlasting Life with Christ Jesus (John. 3:16)